ஜெயலலிதாவின் நம்பிக்கைத் துரோகத்தைத் தொடர்ந்து கடும் கோபத்தோடு விஜய்காந்த், இடதுசாரிகள், ஓடினார்கள். அதைப் பார்த்து மகிழ்ச்சியில் உறைந்திருந்த திமுக கூட்டணி வகையறாக்கள், அவர்கள் ஓடிய இடம் போயஸ்கார்டன் என்பது தெரிந்ததும் மீண்டும் துக்கத்தில் உறைந்தார்கள். இன்று ஒட்டுமொத்த தமிழர்கள் எப்படி சென்னையின் எல்லாச் சாலைகளும் போயஸ்கார்டனில் முடிகின்றன என்று விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே ஜெயலலிதாவின் நம்பிக்கைத் துரோகத்தைப் பேசுகிறார்களே ஒழிய, ஆரிய நம்பிக்கைத் துரோகம் தெரிந்த மறுவிநாடியே, ஆறிக்கொண்டிருக்கும் நம்பிக்கைத் துரோகத்துக்கு எதிராக, ஏன் சோழர்களும் சேரர்களும் பாண்டியர்களுமாகிய தமிழ்த் தலைவர்கள் வெஞ்சினந்து கூட்டணியை விட்டு வெளியேறவில்லை என்று கேட்பதில்லை.
ஜெயலலிதாவுக்கு ஆதரவு செய்ய முடிவு செய்துவிட்ட தினமலரும் தினமணியும், இந்தக் கூட்டணி விவகாரத்திலும் ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தைத் தேடித் தருவதற்காக, இதற்கெல்லாம் காரணம் சசிகலா அன் கோதான் என்று கூறிவிட்டார்கள். சசிகலா என்று ஒருவர் இருப்பதே ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்பதால், மக்களும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு ஜெயலலிதாமேல் அனுதாபப்படத் தொடங்கிவிட்டார்கள்.
யானைத் தன் தலைமேல் மண்ணைப் போட்டுக்கொண்டது போல் கார்ட்டூன் வரைந்தவர்கள் மீண்டும் ஒரு கார்ட்டூனில் அதே யானை தன் தலையில் பூவைப் போட்டுக்கொள்வது போல் வரையலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிருகங்கள் சண்டை அத்தனை சீக்கிரம் ஓயாது என்பதால், நாளை மீண்டும் யானை தன் மேல் மண் தூவாது என்ற நிச்சயமின்மை காரணமாகக் கொஞ்சம் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கு மத்தியிலும் திமுக தொண்டர்கள் சலிக்காமல் அதே பல்லவியான ‘கலைஞர் 130 முதல் 160 தொகுதிகள் வரை வென்றுவிடுவார்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதை தன்னம்பிக்கை என்றும் சொல்லலாம், விநேச காலே விபரீத நம்பிக்கை என்றும் சொல்லலாம்.
விஜய்காந்துக்கும் வைகோவுக்கும் ஆகாது என்று சொல்லி வந்தவர்கள் எல்லாம், விஜய்காந்தே வைகோவுக்கு அதிமுக அணியில் சீட்டு வேண்டும் என்று கேட்டதில் அசந்துபோய் இருக்கிறார்கள். ஆறுவது சினம் என்று அடுத்த வரியில் நின்று ஔவையாரைத் துணைக்கழைக்கிறார்கள். அது சரிதான் என்று வந்து நிற்கிறது, அதிமுக ஆதரவுடன் தாம்ப்ராஸ்.
வைகோவுக்கு சீட்டுத் தாருங்கள் என்று விஜய்காந்த் கேட்டது, மதிமுகவை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் எண்ணம் விஜய்காந்துக்கு இருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. ஒரு கட்டத்தில் கருணாநிதியே வைகோவுக்கு அதிமுகவில் சீட்டு தரவேண்டும் என்று அறிக்கை வெளியிடக் கூடும். இது நடப்பதற்கு முன்பாக 12 இடங்கள் கூட என்று ஒதுக்கி 16 இடங்களை வைகோவுக்குத் தந்துவிடுவது ஜெயலலிதாவுக்கு நல்லது. ஆம், வைகோவுக்கு 4 சீட்டுகளுக்கு மேல் என்ன கொடுத்தாலும் அதிகமே. அதிமுக அணியில் ஓர் அமைச்சரைப் போல ஜெயலலிதா விசுவாசியாக இருந்தவர் வைகோ. ஓர் அமைச்சருக்கு 4 இடங்கள் அதிகமில்லையா என்ன?
அதிமுக கொடிக் கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதாக சன் டிவியும் கலைஞர் டிவியும், திமுக, பாமக கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதாக ஜெயாடிவியும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது. முன்பும் இப்படித்தான் நடந்தது, ஆனால் தேர்தலில் அது பாதிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல் கூர்நோக்கர்கள்!
இது போன்ற எந்தப் பிரச்சினையும் வெளியில் காங்கிரஸுக்கு இல்லை!
இதற்கு முன் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் எனது கணிப்பாக நான் ஒன்றைச் சொல்லி வந்திருக்கிறேன். கொஞ்சம்கூடப் பிசகாமல் அப்படியே முடிவு மாறி வந்திருக்கிறது. மக்களுடன் பழகுங்க என்றெல்லாம் அறிவுரை சொன்னார்கள் நண்பகள். இந்த ஒரு வரியை எழுதுவதற்காக மக்களுடன் பழகுவதெல்லாம் தேவையா சொல்லுங்கள். அதற்காக கருத்தைச் சொல்லாமல் இருக்கமுடியுமா?
திமுக கூட்டணி அதிகபட்சம் 40
அதிமுக கூட்டணி 160க்கு மேல்.
இதுதான் என் கணிப்பு. மீதி சீட்டுகள் என்னாகும் என்று கேட்கும் கணக்குப் புலிகள் முதலில், 7 x 2 = 14ஆ அல்லது 2 x 7 = 14ஆ என்பதற்குப் பதில் சொல்லிவிட்டு என்னிடம் வாருங்கள். இதையும் மீறி என்னிடம் வந்தால், மீதி இடங்களில் பிஜேபி ஜெயிக்கும் என்றுதான் சொல்லவேண்டியிருக்கும்.
(பின்குறிப்பு: இதையும் மீறி விஜய்காந்த் மீண்டும் வெளியில் சென்றால், அவருடன் கூட்டணி அமைக்க கடவுளர்கள் காத்திருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.)
//திமுக கூட்டணி அதிகபட்சம் 40
ReplyDeleteஅதிமுக கூட்டணி 160க்கு மேல்.//
ஆஹா.. பிரமாதம்...
Swap
ReplyDeleteChild lock: ON
ReplyDeleteநம்பினோர் கெடுவதில்லை.. இது நாண்கு மறை தீர்ப்பு..
ReplyDeleteஜெயக்குமார்